ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் – 2022

இடம் : பாடசாலை பிரதான மண்டபம்
காலம் : 2022.12.10 திகதி (சனிக்கிழமை)
நேரம் : காலை 10 மணி

அங்கத்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பழைய மாணவர் சங்க பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்தல் தொடர்பான அறிவித்தல்.

சங்கத்தின் பின்வரும் பதவிகளுக்கு தகைமையுடைய அங்கத்தவர்கள் சங்கத்தின் அமைப்புவிதிகளுக்கு (யாப்பிற்கு) அமைய வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

பிரதித் தலைவர்
செயலாளர்
உப செயலாளர்
பொருளாளர்
உப பொருளாளர்

சங்கத்தின் அமைப்பு விதிகளுக்கு (யாப்பிற்கு) அமைய பதவிகளுக்கு போட்டியிடும் அங்கத்தவர்களின் தகைமைகள்.

🖇️ சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்று குறைந்தது ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்திருந்தல் வேண்டும்.

👉🏿 2023 ஆண்டுக்கான அங்கத்துவப் பணத்தை வேட்பு மனுவோடு முழுமையாக செலுத்தல் வேண்டும்.

வேட்புமனு காலம் முடிவடையும் திகதியும் நேரமும்.
👉🏿 2022.12.05 திகதி முற்பகல் 12.30 மணி

🖇️ வாக்களிப்பு மற்றும் தேர்தல்
ஒரு பதவிக்கு இருவர் அல்லது அதற்கு மேல் அங்கத்தவர்கள் போட்டியிடும் போது தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை தற்காலிக செயற்குழு தீர்மானிக்கும். தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெறுவது உறுதி செய்யப்படும்.

2023 ஆண்டில் புதிதாக அங்கத்தவர்களாக சேர்ந்தவர்களுக்கு பதவிகள் தெரிவின் போது வாக்களிக்கும் உரிமையுண்டு.

நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் பொதுச்சபை கூட்டத்தில் பிரேரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவர்.

தலைவர்
பழைய மாணவர் சங்கம்
ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயம் காவத்தை.