Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

August 13, 2026

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்
இலங்கை

ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்

ThanaBy ThanaFebruary 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன  (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் ஊடகவியலாளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருவதாகவும், இதற்கு அவசியமான இடம் வழங்குதல், வளவாளர்களுக்கான செலவு போன்ற சகல செயற்பாடுகளும் இந்நிதியத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் தொடருக்கு தமிழ் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் வி. எஸ். ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உரையில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டின் நிகழ்ச்சித் தொடருக்கு வழங்கப்பட்ட நிதி தற்போது முடிவடைந்துள்ளதாகவும், இவ்வாண்டிற்கான நிகழ்ச்சித் தொடரை நடாத்துவதற்கு அந்நிதியிலிருந்து நிதிப் பங்களிப்பைக் கோரி உள்ளதுடன் அது கிடைத்ததும் உடனடியாக நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026
    Editors Picks

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.