லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண் தொழிலாளர்களும், இரு ஆண்தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
