Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

August 13, 2026

ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

August 13, 2026

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் அதிகரித்து வரும் முதியோர் சனத்தொகையின் சவால்கள்
இலங்கை

நாட்டில் அதிகரித்து வரும் முதியோர் சனத்தொகையின் சவால்கள்

ThanaBy ThanaMarch 3, 2024Updated:March 6, 2024No Comments6 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சுருக்கம்

இலங்கையின் முதியோர் சனத்தொகையானது தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், இம்மாற்றத்தின் பன்முகத் தாக்கங்களைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளை காண்பது அவசியமாக உள்ளது. அதிகரித்து வரும் முதியோர் சனத்தொகை  காரணமாக கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய சவால்களையும் வாய்ப்புகளையும் பற்றி அறிந்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை இக் கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது. உடல்நலம் பேணல், சமூக தொண்டு கட்டமைப்புகள் மற்றும்  உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றின் மீது  முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முன்னுரிமை அளிப்பதன் மூலம், முதியோர்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய முடியும். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக அரச துறையினரும், அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) மற்றும் சமூக அடிப்படை நிறுவனங்களும் (CBO) இணைந்து செயற்படுதல் அவசியமாகும். மேலும், புதிய தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் வணிகத்துறையானது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. முதியோரளை மதிக்கக் கூடிய அவர்களின் உரிமைகளை பேணக் கூடிய நட்புசார்  சமுதாயமொன்றை உருவாக்குவதன் மூலமும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர்களை தீவிரமாக ஈடுபடுத்துவதன் மூலமும், சமமானதும் நிலையானதுமான எதிர்காலமொன்றை எம்மால் உருவாக்க முடியும்.Top of Form

 

இலங்கையில் முதியோர் தொகை

உலக வங்கி அறிக்கை 2021ன் யின்படி, இலங்கையின் சனத்தொகையில் 12.3 வீதமானவர்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். தெற்காசியாவிலேயே அதிகளவிலான முதியோர் எண்ணிக்கையினைக் கொண்ட நாடாக இலங்கை  திகழ்கிறது. இலங்கையில் மொத்த முதியோர் எண்ணிக்கையில் 31.7 வீதமானோர் மேல் மாகாணத்திலும், 4.8 வீதமானோர் வட மாகாணத்திலும் உள்ளனர். இலங்கையின் முதியோர் சனத்தொகையானது தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக புதிதான சவால்களைப் போலவே வாய்ப்புகளையும் நாடு எதிர்நோக்கி வருகின்றது. உலக வங்கியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் தெற்காசியப் பிராந்தியத்தின் மனித அபிவிருத்திப் பிரிவின் 2012 ஆம் ஆண்டறிக்கையானது நாட்டின் மக்கள்தொகை மாற்றத்தை தெளிவாகச் சித்தரிக்கிறது. குறிப்பாக குறைந்த வளங்களுக்கு மத்தியில் முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது. குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள அம்சமாக இலங்கையில் மாறிவரும் சார்பு விகிதத்தை குறிப்பிட முடியும். இது தொழில் செய்யும் வயதினர் 100 பேரைச் சார்ந்திருக்கக் கூடிய குழந்தைகள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2001 ஆம் ஆண்டில் இந்த விகிதமானது 100 தொழில் புரியும் வயதுடைய நபர்களுக்கு 55 தங்கி வாழ்வோர் என்ற எண்ணிக்கையைக் கொண்டதாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2031 ஆம் ஆண்டளவில் 58.3 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கி வாழும் முதியோர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துச் செல்வதன் காரணமாக 2041ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துரையிலும் வாழ்க்கை தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் ஆயுள் அதிகரித்துள்ளமையின் விளைவாக முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சனத்தொகையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றமானது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் சுகாதார துறைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. முதியோர் சனத்தொகையின் தாக்கத்தைப் பற்றி புரிந்துகொள்வதானது கொள்கை வகுப்பாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சமூகத்திற்கும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.                                     

 

இலங்கையில் முதியோர் சனத்தொகை மீது  தாக்கம் செலுத்தும் காரணிகள்

கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் பிறப்பு விகிதத்தில் சரிவை காணக்கூடிணதாக உள்ளது. அதே நேரத்தில் ஆயுட்காலம் சீராக அதிகரித்து வருகிறது. இந்த காரணிகளானது முதியோர் சனத்தொகையில் தாக்கம் செலுத்தியுள்ளது. உடல் நல பேணல், சிறந்த ஊட்டச்சத்து மற்றும் சுகாதார துரை மேம்பாடு போன்ற காரணிகள் ஒருவரின் சராசரி ஆயுளை நீட்டிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், குழந்தைகள் இறப்பு விகிதத்தினை குறைப்பதில் நாடு அடைந்த வெற்றியானது முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது.

 

வெளிநாடுகளில் சிறந்த பொருளாதார வாய்ப்புகளைத் தேடி இளைஞர்கள் புலம்பெயர்வது மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியாகும். இந்த மூளைசாலிகளின் வெளியேற்றத்தினால் உழைக்கும் வயதினரின் தொகை குறைந்து வருவதால்  முதியோர் தொகையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தொழில்வாய்ப்பை பெறும் முகமாக நாட்டை விட்டு வெளியேறும் போக்கானது ஆதரவையும் பராமரிப்பையும் நாடும் முதியோர்களை உருவாக்கியுள்ளது.

 

இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அதன்   போக்குகளும்

சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை அதன் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. முதியோர்களின் விகிதம் (60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத் தரவுகளின் படி, முதியோர்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டளவில் 20% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றமானது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார துறைகளை மறுவடிவமைக்க காரணமாக அமைகிறது.

கருவுறுதல் விகிதமானது குறைந்துச் செல்வதால் உழைக்கும் வயதினரின் சனத்தொகை குறைந்து வருகிறது, இது பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கான சவால்களை உருவாக்குகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போது உழைக்கும் வயதினரைச் சார்ந்து தங்கி வாழும் கமுதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும். இந்த சனத்தொகை மாற்றமானது சமூகத்தில் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் உத்திகளை மீள் மதிப்பீடு செய்ய வழிவகுக்கிறது.

சுகாதாரத் துறையில் முதியோர் சனத்தொகை ஏற்படுத்தும் தாக்கங்கள்.

இலங்கையில் முதியோர் சனத்தொகை சுகாதாரப் பாதுகாப்பு முறைமைகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துகிறது. முதுமையை அடையும் போது, ​​அவர்கள் நாட்பட்ட நோயாளர்களாகின்றனர் என்பதுடன் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுகிறது. இது சுகாதார வசதிகள் மற்றும் வளங்களின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியோர் பராமரிப்பு சேவை மற்றும் நீண்ட கால பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட சிறப்புப் பராமரிப்பு சேவைகளுக்கான  கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் இத் தேவையை நிவர்த்தி செய்ய, சுகாதார உட்கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளல், முதியோர் மருத்துவ துறையைச் சார்ந்த நிபுணர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்  மற்றும் விரிவான சுகாதாரத் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகும். முதியோர்களின் தேவைகளை சுக நலன் பேணும் அமைப்புக்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து செயற்படுவதன் மூலம் முதியோரின் தேவைகளை சுகாதார துறையினால் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதிப் படுத்த முடியும்.

இலங்கையில் முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இலங்கையில் வாழும் முதியோர்கள் நிதி பாதுகாப்பின்மை, சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் தரமான சுகாதார சேவைக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். பல வயதானவர்கள் ஓய்வூதியம் அல்லது சேமிப்பை நம்பியுள்ளனர். இது அவர்களின் அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. மேலும், சமூகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமையை உணர்தல் ஆகியவை முதியவர்களிடையே பரவலாக காணப்படுகின்றன. ஏனெனில் அவர்களுக்கு சமூகத்துடனான தொடர்புகள் குறைவாகக் காணப்படுவது போலவே சமூக பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றமையாகும்..

தரமான சுகநலச்  சேவைக்கான அணுகலானது வரையறுக்கப் பட்டுள்ளமையானது முதியோர்களிடத்தில் கவலையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. முதியோர் பராமரிப்பு சேவைகள், நீண்ட கால பராமரிப்பு வசதிகள் மற்றும் சிறப்பு சுகாதார சேவை வழங்குநர்கள் போன்ற விடயங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், முதியோர்கள் தங்களுக்குத் தேவையான கவனிப்பைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். போக்குவரத்து மற்றும் நடமாடுவதில் உள்ள சிக்கல்கள் சுகாதார சேவைகளுக்கான அணுகல் குறித்து தடையாக காணப்படுகிறது.

 

முதியோர்கள் குறித்தான அரசாங்கத்தின் பூர்வாங்க வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள்

இலங்கை அரசாங்கம் முதியோர்களுடன் தொடர்புடைய சவால்களை அங்கீகரித்துள்ளதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட முதியோருக்கான தேசியக் கொள்கையானது முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது. ஆரோக்கியமான முதுமையை ஊக்குவித்தல், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சமூகத்தில் முதியோர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், வயதானவர்களுக்கு நிதி உதவி வழங்கும் சமூக நலத் திட்டங்களையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் வறுமையைப் போக்குவதையும், முதியோர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், முதியோர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் முதியோர் மருத்துவமனைகளை நிறுவுதல் மற்றும் முதியோர் பராமரிப்பு பற்றிய சுகாதார நிபுணர்களுக்கான பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும்.

 

இலங்கையில் முதியோருக்கான சமூக ஆதரவு அமைப்புகள்

அரசாங்கத்தின் பூர்வாங்க வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக, சமூக ஆதரவு அமைப்புகள் இலங்கையில் வயதான மக்களுக்கான உதவிகளையும் கவனிப்பையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) மற்றும் சமூ அடிப்படை நிறுவனங்களும் (CBO) பெரும்பாலும் சமூக நல சேவைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகின்றன. இந்த நிறுவனங்கள் வீட்டை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு, சமூகமயமாக்கலுக்கான சமூக மையங்கள் மற்றும் ஆரோக்கியமான முதுமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

இலங்கையில் வயோதிபர்களை பராமரிப்பதில் குடும்பங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரியமாக, வயதானவர்களுக்கு ஆதரவையும் பராமரிப்பையும் வழங்குவது குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பாகும். இருப்பினும், நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு போன்ற மாறிவரும் சமூக இயக்கவியலானது குடும்பங்களினால் ஏற்று மேற்கொள்ளப்படும் இந்தப் பணியை சவாலாக மாற்றியுள்ளது. வேலை மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் பணியில் அதிகரித்துச் செல்லக் கூடிய கடின நிலையை ஏற்படுத்துவதால் இது மாற்று ஆதரவு அமைப்புகளின் அதிகப்படியான தேவைப்பாட்டினை உணரச் செய்கிறது.

 

முதியோருக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வணிக நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்.

முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வணிக நிறுவனங்களுக்கு முதியோர் சனத்தொகையானது வாய்ப்புகளை வழங்குகிறது. விசேட சுகாதார சேவைகள் முதல் ஓய்வு பெறும் சமூகங்கள் வரை, முதியோர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களை நிவர்த்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரித்து வருகின்றதி. வயதானவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் மற்றும் சலுகைகளை உருவாக்குவதன் மூலம் வணிக நிறுவனங்கள் இந்த சந்தையில் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, பாதுகாப்பு மற்றும் அணுகலை உறுதி செய்யும் அதே வேளையில் சுதந்திரமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் வயதுக்கு ஏற்ற வீட்டு விருப்பங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கூடுதலாக, உதவி சாதனங்கள் மற்றும் டெலிமெடிசின் போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள், சுகாதார அணுகலை மேம்படுத்தலாம் மற்றும் வயதானவர்களுக்கு வயதை அடைய உதவும். வயதான மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், வணிகங்கள் அவற்றின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்க முடியும்.

 

 

இலங்கையில் வளம்மிக்க முதியோர் தொகையை கொண்டிருப்பதற்கான பரிந்துரைகள்

முதியோர்களை நிர்வகிப்பதற்கு ஆரோக்கியமான முதுமைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு விரிவான உத்தி அவசியமாகும். அதிகரித்த ஆயுட்காலம் பிரதிபலிக்கும் வகையில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது, அணுகக்கூடிய சுகாதார வசதிகளை உறுதி செய்தல், முதியோர்களுக்கான பகுதி நேர வேலை வாய்ப்புகளை ஊக்குவித்தல், வயதான தொழிலாளர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்குதல். மற்றும் பள்ளி பாடத்திட்டங்களில் முதியோர் பராமரிப்பு கல்வியை உள்வாங்குதல் வேண்டும் இந்த பன்முக அணுகுமுறை உள்ளடக்கப்பட்ட கொள்கைகள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அணுகுமுறைகளானது  முதிய மற்றும் இளைய தலைமுறையினரின் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை ஆதரித்து மிகவும் சமநிலையானதும் நிலையானதுமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப பங்களிக்கிறது.

 

முடிவுரை

இறுதியாக, இலங்கையின் முதியோர் சனத்தொகை குறித்து தீர்வு காண்பதற்கு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் அங்கீகரிக்கும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. இது முதியோர்களின் நல்வாழ்வினை உறுதிசெய்ய அவர்களின் சுக வாழ்வு, சமூகமட்ட ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் கணிசமான முதலீடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (அரச சார்பற்ற நிறுவனங்கள்) மற்றும் சமூக அடிப்படை நிறுவனங்கள் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்பதுடன் வணிக துறையானது புதியதும் பொருத்தமானதுமான சேவைகள் மூலம் பங்களிக்க முடியும். அனைத்துத் துறைகளிலும் பங்கேற்பதற்கான முன்னுரிமையை வழங்கும், அனைத்து வயதினரின் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும், நெகிழ்வுத் தன்மை மற்றும் சமத்துவம் மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கைக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவது முக்கியமானதாகும்.

R.P Subadarshini

Research Scholar – Health Economics

Bharathiar University

Coimbatore, Tamilnaadu

India

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026

    இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

    August 13, 2026

    மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.

    August 13, 2026
    Editors Picks

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026

    இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

    August 13, 2026

    மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026

    இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.