பலாங்கொடை மொரஹெல பிரதேசத்தில் வயல் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்நேற்று ஐந்தாம் ( 5) திகதி இரவு மீட்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை மொரஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்ததிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என்றும் பின்னவள
காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு உடலை அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பின்னவள காவற்துறையினர் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பின்னவள காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
M.F.M.Ali
