எம்.எஸ்.எம். றசீன்
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் இலவச வைத்திய முகாம் (06) இன்று புதன்கிழமை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
நகரபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமின் வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ். சசிக்குமார் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
டாக்டர் எம்.எஸ்.எம் பிர்னாஸ் தலைமையிலான வைத்திய குழாத்தினர் இந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை இடம் பெற்றதுடன் உத்தியோகத்தர்களுக்கான புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வும் இதன்போது இடம் பெற்றது.