சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் ,இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, 5 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்தது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று (24) நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து 161 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 39.3 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் இலங்கை அணி ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகியுள்ளது.