Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொழிலாளர்கள் அனுபவித்துவரும் பெரும்பாலான உரிமைகளை இழக்கச் செய்ய நடவடிக்கை
இலங்கை

தொழிலாளர்கள் அனுபவித்துவரும் பெரும்பாலான உரிமைகளை இழக்கச் செய்ய நடவடிக்கை

ThanaBy ThanaApril 23, 2024No Comments6 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை காலனித்துவ காலத்திருந்தபோது உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை நீக்கி தற்போதைய நிலைக்கேற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். ஆனால,; இதற்காக தற்போது செயற்படுகின்ற கீழ்கானும் 13 சட்டங்களை இரத்துச்செய்து தொழிலாளர்கள் அனுபவித்துவரும் பெரும்பாலான உரிமைகளை இழக்கச் செய்து தேசிய சர்வதேசிய முதலாளிகளுக்கு உதவுவதற்காக புதிய சட்ட நகல் Employment Act of Sri  Lanka என்ற பெயரில் வெளியிட தொழில் அமைச்சு தீவிரமாக செயற்படுகின்றது.
இரத்துச் செய்யப்படவுள்ள சட்டங்கள்:
1. 1935ம் ஆண்டு 14ம் இல. தொழிற் சங்க கட்டளை.
2. 1939ம் ஆண்டு 32ம் இல. பிரசவ சகாய கட்டளை.
3. 1941ம் ஆண்டு 27ம் இல. சம்பள நிர்ணய சபை கட்டளை.
4. 1942ம் ஆண்டு 45ம் இல. தொழிற்சாலை கட்டளை.
5. 1950ம் ஆண்டு 43ம் இல. கைத்தொழில் பிணக்குச் சட்டம்.
6. 1954ம் ஆண்டு 19ம் இல. கடை மற்றும் காரியாலய ஊழியர் சட்டம்.
7. 1956ம் ஆண்டு 47ம் இல. பெண்கள் பிள்ளைகள் தொழில் வாய்ப்பு சட்டம.;
8. 1971ம் ஆண்டு; 45ம் இல. சேவை முடிவுறும் விசேட சட்டம்.
9. 1983ம் ஆண்டு 12ம் இல. சேவைகால கொடுப்பனவு சட்டம்.
10.2005ம் ஆண்டு 36ம் இல. வரவு செலவு திட்டக் கொடுப்பனவு சட்டம்.
11.2016ம் ஆண்டு 04ம் இல. வரவு செலவு திட்டக் கொடுப்பனவு சட்டம்.
12.2016ம் ஆண்டு 03ம் இல. தொழிலாளர் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டம்.
13.2021ம் ஆண்டு 28ம் இல. சேவையிலிருந்;து ஓய்வு பெறும் வயது சட்டம்;.

கடந்த காலங்களில் தொழிற் சங்கப் பேராட்டங்களினால் வென்றெடுத்த கோரிக்கைகளின் மூலமாகவே அதிகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட போராட்டங்களில் தங்களது உயிர்களை தியாகம் செய்த தியாகிகள் பலர் உள்ளனர் என்பது வரலாறாகும். மற்றும் எந்த முதலாளியோ அல்லது முதலாளித்துவ அரசோ தொழிலாளர்களுக்கு உரிமைகளை வெள்ளித் தட்டில் வைத்து வழங்கியதும் வரலாறே கிடையாது.
இந்த நகலில் 21 புதிய அத்தியாயங்களை 214 பக்கங்களில் ஒரே புத்தகமாக சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு ஆங்கிள மொழிபெயர்ப்பு 10 அத்தியாயங்கள்; வரையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்பெயர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. இதன் முதலாவது அத்தியாயத்தில் தொழிலாளர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:-
1. . Permanent contract of employment. நிரந்தர வேலை ஒப்பந்தம்.
2.Fixed Term Contract of employment.நிலையான கால வேலை ஒப்பந்தம்.

3.Contract of probation   சோதனை ஒப்பந்தம்
4. Part-time contract of employment பகுதி-நேர வேலை ஓப்பந்தம்.
5.Seasonal contract of employment.  பருவ கால வேலை ஒப்பந்தம்
6.Temporary contract of employment. . தற்காலிக வேலை ஒப்பந்தம்

தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக 12 மணி நேர வேலை. ஒரு சில சேவைகளுக்கு 16 மணித்தியாலம் முதல் 24 மணிவரை வேலை வாங்குவது. வேலைக்கு சேரும்போது முதலாளி அல்லது தொழில் தருனர்க்கு தேவையான சகல நிபந்தனைகளையும் நியமனக் கடிதத்தில் சேர்க்கப்பட்டு கையொப்பம் பெற்றுக் கொள்ளப்படும். இக்கடித நிபந்தனைகளை சவாலுக்கு உட்படுத்த முடியாது. நிருவனங்களில் தொழிற் சங்க செயற்பாட்டாளர்களை முதலாளிக்கு வேண்டிய நேரத்தில் வேலை நிறுத்தவும் தொழிற் சங்க செயற்பாடுகளை முடக்கவும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

காரியாலய மற்றும் வியாபார ஸ்தாபனங்களில் பெண் தொழிலாளர்களை இரவு நேர வேலைக்கு அமர்த்தும்போது போக்குவரத்து வசதிகள், சம்பந்தப்பட்ட பெண்களின் விருப்பம், ஓய்வு அறைகள், பெண்; காப்பாளர்கள், மாதத்திற்கு 10 அல்லது 15 நாட்கள் வேலை செய்தல் போன்ற நிபந்தனைகள் நீக்கப்;பட்டுள்ளன. கடை மற்றும் காரியாலய தொழிலாளார் பெண் தொழிலாளர்கள் இரவு நேர வேலை செய்யவேண்டுமென அமைச்சரவையும் கடந்த 08.08.2023ல் அனுமதி வழங்கப்படுள்ளதாக ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ சகாயங்கள் வழங்கப்படுவதிலிருந்து முதலாளிமார் விடுவிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி விடுமுறை நாட்களில் மேலதிக கொடுப்பனவு இல்லாமல் தொழில் செய்யவேண்டிவரும். சேவையிலிருந்து ஓய்வு பெறும் வயது 60லிருந்து 55 ஆக குறைக்கப்பட்டுள்ளன. “மேன்பவர்” முறையினை சட்டமாக்கவுள்ளது. இதனால் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு நிச்சயமற்றதாகும். தொழிலாளர்களின் வேலை நேரம், உணவு நேரம், வார இறுதி விடுமுறைகள், மேலதிக நேரம் போன்றவைகள் முதலாளிமார்களின் முடிவாகும்.

நிரந்தர தொழிலுக்கு ஒப்பந்த அல்லது தற்காளிக தொழிலாளர்களை அமர்த்துவது. தொழிலாளர் சம்பள உயர்வு செயல் திறனுக்கு ஏற்ப்ப வழங்குவது. மூலப் பொருட்கள் இன்மை, தொற்று நோய்கள் போன்ற காரணங்களால் உற்பத்திகள் மேற்கொள்ளாவிட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது. முதலாளிகளின் விருப்பத்தின்படியே சம்பள உயர்வுகள் வழங்கப்படும். பாடசாலைச் செல்லும் பிள்ளைகளுக்கு தொழிலில் ஈடுபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சேவை கால ஓய்வூதியம் (Gratuity) பெறுவதற்கு ஒரு வருடத்தில் 180 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும.;; இதை தடுக்க பல சரத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள நிருவனங்கில் ஓய்வுபெற நிரந்தரமாக தொழில் செய்ய இயலாத நோய் காரணமென வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டவர்கள், தொழிலிருந்து நீக்கப்பட்டவர்கள், மூடப்படும் நிருவனங்களிலுள்ள தொழிலாளர்கள், நியமனக்கடித சரத்தின் பிரகாரம் மற்றும் தொழில் ஆணையாளரின் தீர்மானம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் உலகலாவிய பொதுவான விதிமுறைகளுக்கு முற்றிலும் அந்நியமானதாகும். மற்றும் தொழிலாளர் பரிணாம வளாச்சியின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகலாவிய தரநிலைகளுக்கும் முற்றிலும் முரனாதாகும். எட்டு மணிநேர வேலைக்காக 1886ல் அமெரிக்கா சிக்காக்கோ நகரில் ஏற்பட்ட தொழிலாளர் போராட்டத்தில் வெற்றிகண்ட உரிமைகளை நினைவுகூற உலகிலுள்ள சகல நாடுகளிலும் தொழிற்சங்க அரசியல் கட்சிகள் செயற்படுகின்றதோடு விடுமுறை வழங்கப்படுவதையும் இப்புதிய சட்;டதினால் நமது நாட்டில் இழக்க நேரிடும்.

தொழிற் சங்கம் உருவாக்குவதற்கு 1956ல் ஏப்ராம் சிங்கோ தனது உயிரையும் தியாகம் செய்தது வரலாறாகும். இந்த நகலில் தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 07 இலிருந்து 100 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு புதிய நிபந்தனைகளால் தொழிற்சங்கங்கள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.

8வது அத்தியாயத்தின் 70வது சரத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவர்கள் 03 வருடங்கள் அதற்கு மேலும் 02 வருடங்கள் தொழில் செய்ய முடியும் மற்றும் இலங்கை பிரஜையை திருமணம் செய்து கொள்ளவும் இலங்கையில் வசிக்கவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளி 06 மாதத்திற்கிடையில் தொழிற் நீதி மன்றத்திற்கு வழக்குத் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம் ஏற்படுத்தி 03 மாதத்திற்கிடையில் வழக்குத்தாக்கல் செய்வது சம்பந்தமாக 9வது அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ1 அத்தியாயத்தில் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு என்ற தலைப்பில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் வழமையாக அனுபவிக்கும் சலுகைகள் மறுக்கப்படும்போது போராட்டங்கள் பல வகைகளில் மேற்கொள்ளப்படுவது சகஜமாகும். இதை தடுக்க கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

1. பதிவுசெய்யப்பட்டத் தொழிற்சங்க அங்கத்தவர்கள் வேலை நிறுத்தம் செய்வதானால் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் சம்மதம் பெற இரகசிச வாக்கெடுப்பு பெறவும்; வேலை நிறுத்தம் செய்யும் திகதி, நேரம், இடம் மற்றும் பிரச்சினைகள் போன்ற சகல விபரங்களும் பதிவாளருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கப்படவேண்டும். மொத்த அங்கத்தவர்களின் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்களின் சம்மதம் அவசியமாகும்.

2. வேலை நிறுத்தம் அல்லது கதவு அடைப்பு போன்றவைகளை தடை செய்ய நீதி மன்ற தீர்ப்பு கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில்; வேலை நிறுத்தம் அல்லது கதவு அடைப்பு சட்ட விரோதமானதாகும்.

ஏ அத்தியாயத்தில் சம்பள நிர்ணய சபை முறையை மாற்றி தேசிய சம்பள கவுன்சில் முறை ஏற்படுத்துவது. இவ் அத்தியாயத்தின் 55 (1)ல் மாத சம்பளமாக ரூபா 21,000.00 நாள் சம்பளமாக ரூபா 840.00 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-
1.முதலீட்டை ஊக்குவித்து புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் (Promote Investment and create job opportunities)

2. சமூக பாதுகாப்பை வலுப்படுத்தல். (Strengthen Social security))
3. சிறந்த தொழில் வாய்ப்பைஃசிறந்த தொழில்களை உருவாக்குதல் (Create better employment/better jobs)
4. தகவல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த நவீன தொழில் உலகத்தின் திறனை
உணர்ந்து கொள்ள, தொழிலாளர் மற்றும் முதலாளிகளுக்கு நெகில்வான
செயல்படுத்தும் சூழலை உருவாக்குதல். (Create Flexible/enabling environment for employees and employers to realize the full potential of information and technology driven modern world of work)

 

தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக தோட்டத் தொழிற் சங்க கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்:-
1. தொழிலாளர்களின் குடியிருப்புகளான லய அறை முறையை ஒழித்து தனி வீட்டு முறை உருவாக்க வேண்டும.;
2. காணி உரிமை வழங்க வேண்டும்.
3. தற்போதைய சேவைகால கொடுப்பனவு முறை தொடர்வதோடு சுகயீனம் மற்றும் 180
நாட்கள் வேலை செய்யமுடியாத பலவீணமானவர்களுக்கு மாற்று முறைகளும் சேமலாப
நிதி, நம்பிக்கை நிதியம் போன்றவைகளுக்கு உரித்துடையவர்களாக்க வேண்டும்.
4. கைத்தொழில் பிணக்குச் சட்டப் பிரகாரம் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளும் உரிமை
அவசியம்.
5. தொழிற் சங்கம் புதிதாக அமைக்க தொழிலாளர் எண்ணிக்கை 07 லிருந்து 100 ஆக
உயர்த்துவது அடிப்படை உரிமை மீறலாகும்.
6. எட்டு மணி நேர வேலை நீண்ட போராட்டத்தில் வெற்றி கண்ட உரிமையையும் மாற்றும
; திட்டத்தை உத்தேச நகலிருந்து நீக்க வேண்டும்.
7. ஓய்வு பெறும் வயதை 55 ஆக குறைப்பது தனியார் துறை மாத்திரமல்ல அரச
சேவையும் பெரிதும் பாதிக்கும.
8. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக சம்பள நிர்ணய
சபை உயர்வின் பின் வேலைப்பழு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகமான
தொழிலாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு கிடைப்பதில்லை.
9. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் பெண் தொழிலாளர்களின் சுகாதார
வசதிகள் சம்பந்தமாக பல முறை தெளிவுபடுத்தியும் இன்னும் எவ்வித நடவடிக்கைகளும்
மேற்கொள்ளவில்லை.
10. பாடசாலைக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்புவது பிள்ளை
அடிப்படை உரிமைகள் மீறலாகும்.
11. பிரசவ சகாய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்
என்பது தோட்டத் தொழிற் சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளாகும்.

இந்த உத்தேச நகலில் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கக்கூடிய சரத்துகள் உள்ளதால் தொழிற் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு வாபஸ் பெறுமாறு கோரியுள்ளன. ஆனால் தொழில் அமைச்சு இவைகளுக்கு செவிசாய்ப்பதாயில்லை. ஆகையினால், சகல தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களும் சகல பேதங்களையும் மறந்து தொழிலார்களை பாதிக்கும் சட்டங்களை மாற்றியமைக்க குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

ஆ. முத்துலிங்கம்.
பொதுச் செயலாளர்.
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்.
;

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.