நுவரெலியா இஸ்கிராப் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 08 ஆம் திகதி பால்குடபவனி. சங்காபிஷேகம். அன்னதானம் என்பன நடைப்பெற்று இரவு திருக்கல்யாண நிகழ்வு நடைப்பெற்றது 09 ஆம் திகதி முத்தேர் பவனி ஆலயத்தில் இருந்து நுவரெலியா நகரம் சென்று மறுநாள் 10 ஆம் திகதி ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு பூஜை.பூங்காவன திருவிழா என்பன நடைப்பெற்று 11 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.த.சுதன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.