யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 40 நாட்களே ஆன பெண் குழந்தையொன்று தொண்டையில் பால் அடைத்ததால் உயிரிழந்துள்ளதாக தெலிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணுவில் பிரதேசத்தில் வசிக்கும் தாயொருவர் தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்திருந்த போது மகளிடம் எந்தவொரு அசைவும் இல்லாதிருப்பது கண்டு தெலிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனினும் சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னமே உயிரிழந்துள்ளதாக தெலிப்பளை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சிசுவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில், தொண்டையில் பால் சிக்கியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
