அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதோடு, வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் காலைநேர பேருந்துகளில் மாணவர்கள் வருகையின்றி வெறுமையாக பயணித்தமையும் காணமுடிந்தது.
பசறை நிருபர்


