தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க முடிந்தாலும், அது பற்றி அக்கறை இல்லாமல் செயற்படும் உள்ளுர் பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் செய்து கொண்ட காணி குத்தகை ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கும் குறித்த சம்பளத்தை வழங்குவதற்கான திறனை தீர்மானிக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க முடிந்தும் சம்பளம் வழங்காத தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட உள்ளன.
