தெமோதரை 9 வளைவு பாலத்திற்கருகில், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தெமோதரை- கவரவெல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
விபத்து தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
