இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் இராமநாதபுரம் – மானாங்குடி கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 10 பெட்டிகளில் பொதிசெய்யப்பட்டிருந்த 570,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
