தமிழ் – சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2013ம் ஆண்டு கொழும்பு – ஒருகொடவத்த பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுது.இந்த நிலையில் குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்படி பிரதிவாதிகள் நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.இதற்கமைய குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.