இந்தியா,தமிழ்நாட்டில் உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கூடம் ஏற்பாட்டினில் “சங்கநாத” இணைய வானொலியின் 3வது துவக்க விழாவில் (2024/08/240 நு/ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் 2ஆம் வருட கலைப்பிரிவில் கல்விப்பயிலும் மாணவியான செல்வி ராஜேந்திரன் தனுஷா இலங்கையின் சிறந்த இளம் பாடகிக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் இந்திய ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் A. R.ரகுமானுடைய தங்கையும் ,தயாரிப்பாளருமான ரஹேனா மற்றும் இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

