தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக இளவாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை மாணவியை மீட்ட பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , தந்தையிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.