Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

August 13, 2026

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் (13) நேற்று மாலை மன்ராசி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
மலையகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் (13) நேற்று மாலை மன்ராசி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

ThanaBy ThanaSeptember 14, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்  ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் (13)  நேற்று மாலை மன்ராசி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் நீர் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு பேசுகையில்.

இன்று எமது கட்சியின் கோட்டைக்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேபோல் இந்த கூட்டத்திற்கு நீங்கள் வந்ததற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கூட்டம் 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது இருந்த போதிலும் நமது நாட்டின் இறுதி அமைச்சரவை இன்று தான் நடைபெற்றது .அதேபோல் அதற்கு  சென்றிருந்தேன்.
நேற்று இரவு வேளையில் ஜனாதிபதி அவர்கள் எனக்கு அழைப்பினை விடுத்து நாளைய தினம் அமைச்சரவைக்கு கட்டாயம் வரவேண்டும் என கூறினார்.
அதேபோல் நான் இன்று சென்றதும் உங்களுக்கு சம்பள உயர்வு 1350 காண வருத்தமானியில் கையெழுத்திட்டு எனது கைக்கு கொடுத்தார்.

அனேகமானோர் சொல்கின்றனர் 1700 ரூபாய் நீங்கள் வாங்கி கொடுக்காமல் 1350 வாங்கி கொடுத்துள்ளீர்கள் என விமர்சனம் செய்கின்றனர்.

1700 ரூபாய் வாங்கி தருகிறேன் என்று சொல்லியிருந்தேன் இருந்தபோதிலும் 1350 பெற்று கொடுத்துள்ளோம். இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி ஆகும் ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றில் முதல் தடவையாக  அக்கரபத்தனை  பகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அதேபோல் இதுவரையும் மலையகத்தை நாங்கள் எந்த இடத்திலும் தலைகுனிய வைத்ததில்லை அதுதான் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

அதேபோல் ஒரு சிலர் விமர்சனம் செய்கிறார்கள் அவர்களே 2018 ஆம் ஆண்டு 50ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினர். இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்தார்களா இல்லை.

அதேபோல் சஜித் பிரேமதாஸ அவர்களும் சிறு தோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்று சொல்கின்றார். நடைமுறைப்படுத்துவதை சொல்ல வேண்டும் அதை விடுத்து பொய்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் ரூ.50 பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் இன்று எம்மை விமர்சனம் செய்கின்றார்கள்.

இம்முறை நுவரெயா மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நாங்கள் வெற்றி பெறுவோம் அந்த வெற்றியில் மலையக மக்களாகிய நீங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. அதேபோல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினில் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கின்றது.

அவற்றையும் 22 ஆம் திகதிக்கு  பிறகு காலினை உடைத்து விரட்டி அடிப்போம் ஏனென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என சொல்லிக்கொண்டு இந்தப் பக்கம் ஒரு கால் அந்த பக்கம் ஒரு கால் என வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

நான்கு வருட காலமாக நான் பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். இதில் 88 தடவைகள் மலையை மக்கள் சார்ந்த பேசியிருக்கின்றேன்.

அதை விடுத்து நான் பாராளுமன்றத்திற்கு சென்று மலையக மக்களை சார்ந்து அல்லாமல் வெறுமனே வெற்று கதைகளை பேசி கொள்வதில்லை.

உங்களுக்கு தெரியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த விலைக்கும் தற்போது இருந்த விலைக்கு எவ்வளவு வித்தியாசம் என்று. ஆனால் விலைவாசி அதிகரித்திருந்தாலும் 2 வருடத்திற்கு முன் நாட்டில் பொருட்களே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது ஆனால் தற்பொழுது விலை அதிகரித்தாலும் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் இப்பொழுது இருக்கின்றது.

‌ சேவல் கட்டாயம் கூவும் மீண்டும் ரணில் மீண்டும் ரணில் என கூறியதோடு மலையக அபிவிருத்தி சம்பந்தமான கருத்துக்களையும் இதன்போது பேசினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026
    Editors Picks

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.