நுவரெலியா நகர அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து புனரமைக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடம் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி டினிகா கவிசேகர தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பெண் தொழில் முயற்சியாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கிலான தொடர் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட அவர்களின் முழு வழிகாட்டுதலிலும் நிதியுதவியிலும் இந்த வர்த்தக நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
USAID ஸ்கோர் செயல்பாடு.
இச்செயற்திட்டத்தின் கீழ் 30 பெண் தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி நவீனமயமாக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மாவட்ட செயலக ஊழியர்கள், USAID SCORE செயற்பாட்டின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
