இலங்கை – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதன் முகாம் டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அணி இந்த பட்டியலில் தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணி இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி, புள்ளிப்பட்டியலில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.