இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. எமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன் “. என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடைய வாழ்த்துக்கு அனுரகுமார திஸாநாயக்கவும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R