2023 [2024] பல்கலை கழகத்திற்கான நுளைவிற்கான தெரிவினில் நு/ஹோல்புறூக் கல்லூரியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவினில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்கு ஐந்து மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்திற்கு செல்வி V. அபிலாஷினி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தின் கலை பீடத்திற்கு செல்வி R.செல்சியா ஜெனிபர் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தின் பரதநாட்டிய பீடத்திற்கு செல்வி C.வினோதினி மற்றும் செல்வி S.பிரமிளா ஆகியோரும் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கர்நாடக சங்கீதம் பீடத்திற்கு செல்வி.M.சிரோமியா என யாவரும் தெரிவு செய்யப்படுள்ளமையானது பெருமிதத்திற்குரியதாகும்.
அந்த வகையில் பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவ செல்வங்களுக்கும் இவ் மாணர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலையின் நிர்வாகத்தினர்கும் ஆசிரியர் குழாத்திர்களுக்கும் பாடசாலை சமுகத்தினர்கள் யாவருக்கும் மலையகம்.lk சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.