நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் தனது 5 ஆவது சதமாக அவர் இதனை பூர்த்தி செய்துள்ளார்.
சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையிலேயே மேற்படி ஐந்தாவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.