2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் அந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரிகளையும் 30 செப்டம்பர் 2024 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒருவர் இதை கவனிக்கவில்லை என்றால், வருமான வரி செலுத்தாமல் அல்லது தாமதமாக செலுத்தினால் சட்டப்படி அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அபராதம் அல்லது வட்டி குறைக்கப்படாது அல்லது நீக்கப்படாது என்றும் அது கூறுகிறது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 1944 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.