2024.09.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் துமிந்த ஹூலங்கமுவ பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராகவும் மற்றும் கலாநிதி. ஏ.ஏ.ஜே. பர்னாந்து பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கௌரவ சேவைஅடிப்படையில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக (30.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் உடன்பாடுதெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 41 ஆவதுஉறுப்புரையின் (01) ஆம் உப உறுப்புரையில் அதிகாரமளிக்கப்பட்டதன் பிரகாரம் அமைச்சரவையின் கருத்துக்களைக் கேட்டறிந்து தனது பணிக்குழாமினரை நியமிப்பதற்கானஅதிகாரம் ஜனாதிபதி ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.