தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 08 நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி, தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்வதை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்பதாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
