மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள
பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாய பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் மற்றும் முன் அறிவிப்பு எச்சரிக்கை விடுக்கும் மழை அளவு கருவிகள் பொருத்தப்பட்டன.
பலாங்கொடை பிரதேச செயலாளர் லக்ஸிக்கா மீகெல்ஆராச்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தில் பல இடங்களில் மழை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டன.
