தொடரும் சீரற்ற வானிலை காரணமாக களு மற்றும் வளவ கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், எஹலியகொடை, இரத்தினபுரி, இறக்குவானை, மற்றும் பெல்மதுளை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், புவாக்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
