2024 ஆம் ஆண்டுக்கான பொதுதேர்தலில் நுவரெலிய மாவட்டத்தில் ‘மலரும் மலையகம்’ சுயேற்சை குழு சார்பில் அதன் தலைவர் வி. தனரூபன் தனது வேட்பு மனுவை வெற்றிகரமாக நேற்று சமர்ப்பித்தார்.
நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதற்கான புதிய முற்போக்கு சிந்தனையுடன் தான் செயற்படப்போவதாகவும் அதன் தலைவர் தனரூபன் தெரிவித்தார்.
பாரம்பரிய அரசியலுக்கு அப்பாற்பட்டு புதிய தூரநோக்கு சிந்தனையுடன் தனது அரசியல் பயணம் அமையும் என்றும், அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
