Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆயுதப்படையினர் வெள்ள நிவாரண பணியில்
இலங்கை

ஆயுதப்படையினர் வெள்ள நிவாரண பணியில்

ThanaBy ThanaOctober 16, 2024Updated:October 16, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் நிவாரணாப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் சிறிய நிலச்சரிவுகள் ஏட்பட்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயுதப்படை மீட்புக் குழுக்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்துடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மல்வானை, கட்டுகொட, வடரெக்க, சீதாவக்க, மீதொட்டமுல்ல, கொலன்னாவ, நவகமுவ, பெலவத்தை, யடதொலவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இராணுவம் நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதாக இராணுவ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இராணுவத்தின் அயர்ன்ஹோஸ் மற்றும் யூனிபபெல் கவச வாகனங்களும் படகுகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஏட்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க
6,500 படையினரும் 23 WMZ கவச வாகனங்கள், 34 யூனிபபெல் மற்றும் யூனிகார்ன் கவச வாகனங்கள் மற்றும் 56 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு இலங்கை கடற்படை எட்டு வெள்ள நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. கடுவெல, மாபிம, நவகமுவ, இஹலகம, ஜா-எல மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படை அதன் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் 48 நிவாரணக் குழுக்களை தேவைக்கேட்ப ஈடுபடுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி (CDS) நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

நிவாரணக் குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு பொருட்களை வழங்கவும் உதவுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.