Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதியின் மாற்றம் பொருட்களின் விலையேற்றமே – இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு
இலங்கை

ஜனாதிபதியின் மாற்றம் பொருட்களின் விலையேற்றமே – இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு

ThanaBy ThanaOctober 23, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவா மாற்றம் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு நேற்று மாலை (23.10.2024) நுவரெலியா – நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்ச்சியம் ஆனவர்கள் கிடையாது.

ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.

Photo (1).jpg

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.