Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026

மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம்
இலங்கை

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம்

ThanaBy ThanaDecember 4, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெறும் குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் நலன்புரி நன்மைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு..

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகள் குடும்பங்கள் 04 வகையான சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகளின் தாக்கங்கள் முழுமையாக நீங்காமையால், நிலையற்றவர்;கள் மற்றும் ஆபத்துக்கு உட்பட்டவர்கள் ஆகிய சமூகப் பிரிவினர்களுக்குரிய முதலாம் சுற்று விண்ணப்பங்களுக்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து சில காலங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சமகால வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொள்ளும் போது தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுத் தொகை போதியளவாக இன்மையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமையைக் கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500ஃ- ரூபாவை 10,000/- ரூபா வரைக்கும், 15,000/- ரூபாவை 17,500/- ரூபாவாகவும் அதிகரிப்பதற்கும் மற்றும் அதற்கிணங்க திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கின்ற நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்

• நிலையற்றவர்கள் எனும் சமூகப் பிரிவினருக்கான நலன்புரிக் கொடுப்பனவு செலுத்தப்படும் காலப்பகுதியை 2025.03.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

• ஆபத்துக்கு உட்பட்ட சமூகப் பிரிவினருக்காக கொடுப்பனவுக் காலத்தை 2025.12.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.