நாட்டில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் சுமார் 10,000பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
