ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் கண்டுபிடித்த அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம் மற்றும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலை புத்தாக்குனர் போட்டி மற்றும் கண்காட்சி (11,12) கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் இடம்பெற்றது…
இதில் ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் மாணவர்களான அப்துல் மலிக் மற்றும் சியாஸ் தம் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர்..
இதில் தரம் 10ல் கற்கும் அப்துல் மலிக்கினால் காண்பிக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் (High Power Speaker Amp) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது..
அஹஸ்வெவ M.Ashraf,M.L.F.Rizana ஆகியோரின் புதல்வரான இவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சல்மான்
