மஸ்கெலியா நிருபர்.
செ.தி.பெருமாள்.
2024 – 2025 க்குகாண சிவனொளி பாதமலை பருவகால உற்சவம் நாளை14 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது .இனறு (13 ) அதிகாலை பெல்மதுளை கல்பொத்ஹேன விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் புனித ஆபரணங்களுடன் பேழை இன்று காலை சுப வேளையில் நான்கு வழிகளில் கடும் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றது.
இரத்தினபுரி காவத்தை அவிசாவலை ஹட்டன் மஸ்கெலியா வீதியினூடாக ஊர்வலம் நல்லதண்ணியை சென்றடையும் ,இதேவேளை இரத்தினபுரி பலாபத்த வழியாகவும் , குருவிட்ட ஹெரந்த வழியாகவும் , பலாங்கொடை பொகவந்தலாவ நோர்வூட் வழியாகவும் நல்லதண்ணியை ஊர்வலம் சென்றடையும் .
குறித்த ஊர்வலத்தின் போது வீதியில் பக்கங்களில் மக்கள் நின்று பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.
