கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இரு நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதன் போது அம்புலாவ கல்பங்கலாவ என்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின் ஜெக்கட்டை எடுத்து சாரதியின் கழுத்தை நெறித்து அவரை அடித்து காட்டு பகுதியில் தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர்.
அம்புலாவ பகுதியில் இருந்து எம்மாத்தகம பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் எம்மாத்தகம பகுதியில் இருந்து அம்புலாவ பகுதிக்கு வந்த கார் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டியை கடத்தி கொண்டு சென்ற இரு சந்தேக நபர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டுக்கு பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர்,
இதனை தொடர்ந்து அப் பிரதேச மக்கள் இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுப்பட்டு இரு சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்,
இரு சந்தேக நபர்கள் 23.35 .ஆகிய வயதுக்கு உற்ப்பட்ட நபர்கள் கம்பளை எத்கால்ல பகுதியை சேர்ந்தவர்கள் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
