இலங்கையை தேயிலை உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக மீண்டும் தரம் உயர்த்தும் ஒன்றிணைந்த தேசிய திட்டத்தின் இன்னுமொரு செயற்திட்டம் நேற்று ஆரம்பம்….
இலங்கை தர நிர்ணய சபையின் வழிகாட்டலின் கீழ் யுனிலிவர் நிறுவனத்தின் அனுசரணையில் பெருந்தோட்ட அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேயிலை சார்ந்த நிறுவனங்களின் முக்கிய நிறுவாகிகளுக்கான செயளமர்வு (19/12/2024) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இவ் நிகழ்வுகளை பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
