6 வயதும் 1 மாதமும் உடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தை ஒருவரை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாய் கடந்த 2023 .05.10 திகதி வெளிநாட்டுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் குறித்த சிறுமி பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்ததாகவும் இரவு நேரங்களில் தந்தையிடமே சிறுமி படுத்து உறங்குவதாகவும் அவ் வேளையில் குறித்த நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகவும் குறித்த சிறுமியின் பாட்டியினால்
மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் எவ்வித தொழிலும் இன்றி மனைவி அனுப்பும் பணத்தில் தினமும் மதுபோதைக்கு அடிமையானவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
சிறுமி பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
