Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

August 30, 2026

தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

August 30, 2026

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

August 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு

ThanaBy ThanaJanuary 4, 2025Updated:January 4, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று முதல் (06) திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கைக்கு முதல் முறையாக வரும் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதோடு, இரத்தினபுரி, எலஹெர,பேருவல,எஹெலியகொட,காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்நாட்டு இரத்தினக்கல் கொள்வனவாளர்கள் பலரும் “FACETS Sri Lanka 2025” கண்காட்சியில் பங்குபற்றியுள்ளர்.

உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தரப்புடனான வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்குவதே இந்த தொழில்துறை முன்னோடிகளின் பிரதான நோக்கமாகும். “FACETS Sri Lanka 2025 ” கண்காட்சியின் அடிப்படையில் ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக ஈட்டிகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையினர் ஆவலுடன் பங்கேற்கும் “FACETS Sri Lanka 2025 ” கண்காட்சி, இலங்கையின் உயர் இரத்தினக்கல் மற்றும் ஆபரண பாரம்பரியம், பல்வகைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு சான்றாகும்.

தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரும், தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025.01.04

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மக்கள் பெரும் கவலையில்

    August 30, 2026
    Editors Picks

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.