அநாகரிகமாக காட்டுக்குள் நடந்துகொண்ட எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது காட்மோர் பகுதியிலுள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில்லை பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவந்தது 25 க்கும் 30 க்கும் வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் அடங்கிய குழு , வனப்பகுதியில் உல்லாசமாக இருப்தாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் சாலாவ பகுதியில் உள்ள எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தவுள்ளனர்.
