பசறை நிருபர்.
பதுளை மாவட்டத்தில் உள்ள 576 வாக்கு சாவடிகளில் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருவதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கே. காந்தீபன் தெரிவிக்கின்றார்.
நண்பகல் 12.00 வரையான காலப்பகுதியில் 36.8 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதுடன் கடந்த இரு தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை மக்களின் வாக்களிப்பு ஆர்வம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தில் வெயிலுடன் கூடிய காலநிலை நிலை நிலவி வருவதுடன் மாலை நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் தென்படுகிறன. இதுவரை பாரிய அசம்பாவிதங்கள் தேர்தல் சுமூகமாக இடம்பெறுகின்றது .
