நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகத்தின் போது உயிரிழந்த கலைஞருக்கு அஞ்சலி.
நுவரெலியா இந்து கலாசார பேரவை இன்று ஹாவாஎலிய ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்தில் மலையக கலைஞர்களை கௌரவிக்கு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மலையக கலைஞர்கள் உட்பட பிரபல தென்னிந்திய
கிராமிய பாடகர், இசையமைப்பாளர், கலைத்தமிழ் களஞ்சியம் நிறுவனத்தின் நிறுவனர்
கலை வளர்மணி சுரேஷ் குமார் அவர்களின்
கிராமிய பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன ,மேலும் கோயம்புத்தூர்
TAPASYAMRITAM நிறுவனத்தின் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் இதன் போது இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் சிறப்பம்சமாக நானுஓயா கிளாசோ தோட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகத்தின் போது உயிரிழந்த மூத்த கலைஞருக்கு அஞ்சலியும் ,அவரை கௌரவிக்கும் முகமாக அவர் இறுதியாக ஏற்று நடித்த கதாபாத்திரத்தை காயத்திரி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்கள் நடித்து காட்டினர்.
டி .சந்ரு

