கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( 02)காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு விபத்துக்கான காரணம் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
