தலவாக்கலை – லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நகர சபைக்கு சொந்தமான 12ஆம் இலக்க இறைச்சிக் கடையை குத்தகைக்கு வழங்கும் ஏலத்தின் போது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
