கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா V S அவர்களுடன் சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் அவர்களுடனான நட்பு ரீதியான சந்திப்பொன்று நேற்றைய தினம் (03) இடம்பெற்றது.
இதன்போது சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்திய துணை தூதரகத்தினால் மலையக மக்களுக்காக முன்னெடுத்து வரும் சேவைகள் தொடர்பாகவும், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
