Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
இலங்கை

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

ThanaBy ThanaJune 19, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில்  (18.06.2025) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராகக்கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன.

தற்போது மட்டும் அல்ல தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர். அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் கட்சியுடன் கூட்டு கதையாகும்.

தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது.

என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம்கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேரலாம். எனவே, சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதனால்தான் களவாணிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர். அந்த எதிர்பார்ப்பிலும் தற்போது மண்கவ்வியுள்ளனர்.  எனவே, சஜித்தின் தலைமைத்துவம் வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.” – என்றார்.

ஊடக செயலாளர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.