மனித உரிமைகள் அமைப்பு லங்கா ஏற்பாட்டில் நேற்றைய தினம்(24.06.2025 சர்வதேச இறந்த ஆன்மாக்கள் தினத்தை நினைவுக்கூரும் முகமாக நினைவுக்கூறல் நிகழ்வானது மனித உரிமைகள் அமைப்பு லங்காவால் கொழும்பு-7இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மோதல்கள், அநீதி மற்றும் பேரழிவுகளில் இனம், மதம் அல்லது தேசியத்தைப் பொருட்படுத்தாமல் இழந்த அனைத்து உயிர்களுக்கும் இந்த நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறந்தவர்களை இரக்கத்துடன் நினைவுகூறப்பட்டதோடு, அவர்களின் நினைவைப் போற்றி நீதி, அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நினைவு தினம், ஒவ்வொரு ஆன்மாவும் முக்கியம் என்பதையும், நமது பகிரப்பட்ட மனிதநேயம் அனைத்துப் பிரிவுகளுக்கும் அப்பால் நம்மை ஒன்றிணைக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்கட்டும். இந்த பிரதிபலிப்பு மற்றும் ஒற்றுமை தருணத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றியும் கூறப்பட்டு
நினைவுகூர்ந்தமை சிறப்பு.
தேசபந்து எஸ்.நிமலஸ்பரன் J.P,
மனித உரிமைகள் அமைப்பு லங்கா.
