Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
இலங்கை

உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

ThanaBy ThanaJuly 2, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய ‘நாகரிகமான பிரஜை – முன்னேற்றகரமான மனிதவளத்தை’ உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

க.பொ.த (உ/த) பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் (Z-Score) பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.