கொட்டகலை எரிங்டன் பகுதியில் அமைந்துள்ளது விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிக்கும் நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் .
இதன்போது மலையகத்தில் விசேட தேவை யுடைய பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் மிக அதிகமாக காணப்படுகின்றார்கள் அவர்களை பராமரிப்பதற்கான பராமரிப்பு நிலையங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு செயல்படுகின்ற நிலையங்களில் கூட
வசதி வாய்ப்புகள் உரிமைகள் குறித்து கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமல் இருந்தபோது ,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசேட தேவையுடையோர் குறித்து அதிகமாக கவனம் எடுத்து வருகின்றது.
பாராளுமன்றத்தில் கூட இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எனவே குற்றாலத்தில் இவ்வாறான ஒரு முயற்சியை எடுத்து வருகின்ற சமூக அக்கறையில் உள்ள அனைவரையும் பாராட்டுவதோடு எமது அமைச்சின் மூலம் செயல் படுத்த கூடிய சகல உதவிகளையும் நாங்கள் செயல்படுத்த முயற்சிகளை மேற் கொள்வோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் செயலாளருமான கலாநிதி PP. சிவபிரகாசம் அவர்களும் உரையாற்றி இருந்ததோடு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் சிவநேசன் ,வசந்தமூர்த்தி ஆகியோர்களும்
கலந்து கொண்டிருந்தனர்.
