புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிரீன் சேனல் கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புதிய வானம் விருது விழா மூன்றாவது முறையாக களுத்துறை மாவட்டம் ஹொரணையில் கடந்த 15/12/2025 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசு அசோக் ராஜா கலந்து கொண்டிருந்தார்.
அவரோடு சிங்கள திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர் தேவிந்த கோங்காகே இலங்கையின் பிரபல தொழிலதிபர்கள், தமிழ் இலக்கியவாதிகள் ,ஊடகவியலாளர்கள் ,சினிமா பிரமுகர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் ,குறித்த நிகழ்வில் 50 மகத்தான ஆளுமையாளர்களுக்கு புதிய வானம் விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை,இந்திய நாடுகளைச் சேர்ந்த சமூகத்தின் மகத்தான ஐம்பது ஆளுமைகளை தேர்வு செய்து அவர்களுக்கு மகுடம் சூடும் மாபெரும் விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் திருமதி.தனலட்சுமி மாதவன் மற்றும் ஊடகவியலாளர்; மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரினால் நடத்தப்பட்டு வரும்,
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது.
இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புதிய வானம் விருதுகள் எனும் இந்த மாபெரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது சர்வதேச அளவில் இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிறந்த ஆளுமையாளர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.











